வெளிநாடுகளில் விடுமுறைக்கு தயாராகும் MPக்கள் - sonakar.com

Post Top Ad

Thursday 16 December 2021

வெளிநாடுகளில் விடுமுறைக்கு தயாராகும் MPக்கள்

 


நாட்டின் பொருளாதாரம் குறித்த தீவிர வாத - விவாதங்களின் மத்தியில் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருட இறுதி விடுமுறைகளை மேலைத்தேய நாடுகளில் கழிப்பதற்கான ஆயத்தங்களை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, அவுஸ்திரேலிய உட்பட்ட நாடுகளில் விடுமுறைகள் திட்டமிடப்பட்டுள்ள அதேவேளை மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுவரெலியவில் தமது விடுமுறையைத் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விபரங்களை ஆதாரங்காட்டி விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி 18ம் திகதியே நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத கால விடுமுறையை அனுபவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment