சீன நிறுவனம் புதிய எச்சரிக்கை! - sonakar.com

Post Top Ad

Friday 24 December 2021

சீன நிறுவனம் புதிய எச்சரிக்கை!

 சீன நிறுவனத்துடனான பசளை இறக்குமதி முறுகல் நீடிக்கும் நிலையில் சதுவதேச தரப்படுத்தல் முகவர் நிறுவனங்களிடம் இலங்கையை முறையிடப் போவதாக எச்சரித்துள்ளது சம்பந்தப்பட்ட சீன நிறுவனம்.


தம்மால் அனுப்பப் பட்ட பசளையில் எவ்வித 'பாதகமான' பக்டீரியாக்களும் இல்லையெனவும் இலங்கை அரசு தரப்பு போலியான குற்றச்சாட்டை முன் வைத்து கட்டணத்தை செலுத்த மறுப்பதாகவும் குறித்த நிறுவனம் தெரிவிக்கிறது.


இப்பின்னணியில் இலங்கை வங்கி சீன தூதரகத்தினால் 'தடை' செய்யப்பட்டுள்ளதுடன் கட்டணத்தை செலுத்துவது தொடர்பில் ஆளுங்கட்சியினரிடையே இரு வேறு நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment