அசாத் சாலி விடுதலை; நீதிமன்றம் தீர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Thursday 2 December 2021

அசாத் சாலி விடுதலை; நீதிமன்றம் தீர்ப்பு!

 



இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கும் வகையில் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்த முன்னாள் ஆளுனர் அசாத் சாலி மேல் நீதிமன்றினால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட பின்னர் ஈஸ்டர் தாக்குதல் உட்பட பல்வேறு கோணங்களில் சட்டமா அதிபர் அசாத் சாலியை தடுத்து வைத்திருந்த நிலையில் முன்னதாக மஜிஸ்திரேட் நீதிமன்றம் ஊடகங்களால் வெளியிடப்பட்ட எடிட் செய்யப்பட்ட காணொளிக் காட்சிகளின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகளை புறந்தள்ளி சட்டமா அதிபரை கண்டித்திருந்தது.


எனினும், மேல் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் பிணை வழங்க மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு அதிகாரமில்லையென சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் மேல் நீதிமன்ற வழக்கின் தீர்ப்புக்காக தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். 


இச்சூழ்நிலையில், இன்றைய தினம் மேல் நீதிமன்ற நீதிபதி ரணராஜா அசாத் சாலியை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்துள்ளார். தற்சமயம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அசாத் இரு தினங்களில் வீட்டுக்கு செல்வார் என  சோனகர்.கொம்முக்கு தகவல் கிடைத்துள்ளது.


அசாத் சாலி சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன காவல்துறையை கடுமையாக சாடியதுடன் காட்டமான இறுதி உரையை நிகழ்த்தியிருந்தார்.


இது குறித்து கருத்து வெளியிட்ட திருமதி ருஸ்னா அசாத் சாலி, இத்தனை நாட்கள் பட்ட துன்பங்களுக்கு முடிவு வந்துள்ளதாகவும் இறைவன் கைவிடவில்லையெனவும் உருக்கமாக விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment