அடுத்தது 'பட்டினி' உத்தரவுதான்: சஜித்! - sonakar.com

Post Top Ad

Wednesday 29 December 2021

அடுத்தது 'பட்டினி' உத்தரவுதான்: சஜித்!

 


நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ள அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் மக்களை 'கொஞ்சமாக' சாப்பிடும் படியும் இன்னும் ஒரு பகுதியினர் ஒரு வேளை சாப்பாட்டைக் குறைக்கும் படியும் தெரிவித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த நாள் முதல் கிரிமினல்கள், குற்றவாளிகள், ஆட்சியாளர்களுடைய நெருங்கிய நண்பர்கள் பயனடைந்து வருகின்ற போதிலும் மக்களே தொடர்ந்தும் அல்லலுக்குள்ளாகியிருப்பதாக தெரிவிக்கும் அவர், அடுத்தது பட்டினியோடு இருக்கச் சொல்லும் உத்தரவை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறார்.


ஜனவரியின் உணவுப் பஞ்சம் எதிர்பார்க்கப்படுவதாக மெத்திகா போன்ற நிபுணர்கள் தெரிவித்துள்ள போதிலும் எந்தக் குறைபாடுமில்லையென அமைச்சர் ஜோன்ஸ்டன் போன்றவர்கள் மறுத்து வருவதும், நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து செல்வதாக மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment