ஊசலாடும் ஜனாதிபதி செயலாளர் பதவி - sonakar.com

Post Top Ad

Sunday 12 December 2021

ஊசலாடும் ஜனாதிபதி செயலாளர் பதவி




ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தர பதவி விலகுவதற்கு முயற்சித்து வரும் நிலையில் அவருக்கான மாற்றீடைக் கண்டு பிடிப்பதில் அரசு தள்ளாடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்போது தென்னாபிரிக்காவுக்கான இலங்கை தூதராக பணியாற்றும் பிரதமரின் முன்னாள் செயலாளர் எஸ். அமரசேகரவை அணுகியுள்ள போதிலும் அவர் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், ஜனாதிபதி செயலாளர் பதவி ஊசலாடிக் கொண்டிருப்பதோடு அமைச்சரவையில் நிலவும் குழப்பங்களே இதன் பின்னணியென பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment