இனி பிறப்புச் சான்றிதழோடு 'அடையாள' இலக்கம் - sonakar.com

Post Top Ad

Tuesday 7 December 2021

இனி பிறப்புச் சான்றிதழோடு 'அடையாள' இலக்கம்

 


இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்குமான பிறப்புச் சான்றிதழ் பதிவின் போதே இலங்கை அடையாள இலக்கத்தை வழங்குவதற்கான ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.


இதனூடாக குறித்த பிரஜையின் அரசு சார் சேவைகள் மற்றும் பிறப்பு முதல் இறப்பு வரையான அடையாளப்படுத்தல் இலகுபடுத்தப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 15 வயதையடைந்ததும் தேசிய அடையாள அட்டையை வழங்கும் நடைமுறையும் இலகுவாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


உலகின் பல நாடுகளிலும் இந்நடைமுறை ஊடாக பிரஜைகள் தமக்கான சேவைகள் மற்றும் ஆளடையாளத்தை உறுதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment