கலிசனை கழற்றிட்டு வீட்டுக்கு போவோம்: அலி சப்ரி - sonakar.com

Post Top Ad

Thursday, 9 December 2021

கலிசனை கழற்றிட்டு வீட்டுக்கு போவோம்: அலி சப்ரி

 


நடைமுறை அரசாங்கம் யாருக்கு எதிராகவும் பொய் வழக்கு பதிந்ததில்லையெனவும் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதாகவும் தெரிவிக்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.


இந்நிலையில், அரசு யாருக்கு எதிராகவும் பொய் வழக்கு பதிவு செய்தமை நிரூபிக்கப்பட்டால் தாம் கலிசனை கழற்றி விட்டு வீட்டுக்குப் போவோம் எனவும் அவர் இன்று நாடாளுமன்றில் சவால் விடுத்துள்ளார்.


அண்மையில் அசாத் சாலி விடுவிக்கப்பட்டமை இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதற்கான உதாரணம் என அவர் தெரிவித்திருந்தமையும், எட்டு மாதங்கள் அசாத் சாலி தடுத்து வைக்கப்பட்டு, மஜிஸ்திரேட் நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தீர்ப்பளித்த பின்னரும் சட்டமா அதிபர் அலுவலகம் மேல் நீதிமன்றில் வழக்காட முயன்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment