மியன்மாரின் இராணுவ நிர்வாகம் ஆங் சூ கீக்கு நான்காண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
ஏலவே தடுப்புக் காவலில் உள்ள அவருக்கு எதிராக தேசத்தின் இரகசியங்களைக் காக்கத் தவறியமை மற்றும் கொரோனா விதிகளை மீறியது உட்பட 11 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், இவை யாவும் போவியான சோடிக்கப்பட்ட வழக்குகள் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மியன்மாரில் ஜனநாயக தேர்தல் ஊடாக தெரிவான ஆங் சூ கியின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளதுடன் தற்போது அவரது கட்சி சார்பாக ஜனாதிபதியாக இருந்த வின் மின்ட்டுக்கும் நான்கு வருட சிறைத்தண்டனை, அதே குற்றச்சாட்டுகளின் பின்னணியில் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment