பிணை முறி ஊழல்; ரவிக்கு 'பாதி' விடுதலை - sonakar.com

Post Top Ad

Monday 6 December 2021

பிணை முறி ஊழல்; ரவிக்கு 'பாதி' விடுதலை

 


பிணை முறி ஊழல் விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட பத்து பேருக்கு எதிராக அரசாங்கம் தாக்கல் செய்திருந்த 22 குற்றச்சாட்டுகளில் பதினொன்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த விவகாரத்தின் பின்னணியில் ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசு தரப்பு ஆராய்ந்து வருவதுடன் வழக்கின் விசாரணை எதிர்வரும் வருடம் ஜனவரி 26ம் திகதி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment