மூன்று வெளிநாட்டு தூதரகங்களை மூடும் அரசு! - sonakar.com

Post Top Ad

Friday, 17 December 2021

மூன்று வெளிநாட்டு தூதரகங்களை மூடும் அரசு!

 நாட்டின் பொருளாதாரம் பாரிய சரிவைக் கண்டுள்ளதுடன் டொலர் தட்டுப்பாடு வெகுவான பாதிப்புகளை உருவாக்கியுள்ள நிலையில் மூன்று வெளிநாட்டு தூதரகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.


நைஜீரியா மற்றும் சைப்ரஸ் தூதரகங்கள் மூடப்படுவதுடன் ஜேர்மனி பிரங்போர்ட் நகரில் இயங்கி வந்த தூதரக அலுவலகமும் மூடப்பட்டு அதன் செயற்பாடுகள் பேர்லினுக்கு நகர்த்தப்படவுள்ளதாக அமைச்சர் ஜி.எல். பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.


பொருளாதார சிக்கலை சமாளிக்க அனைத்து அமைச்சுக்களினதும் 'ஆதரவை' நிதியமைச்சர் கோரியிருந்த நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சு இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment