நாடு இராணுவ மயப்படவில்லை: பா. செயலாளர் - sonakar.com

Post Top Ad

Wednesday, 15 December 2021

நாடு இராணுவ மயப்படவில்லை: பா. செயலாளர்

 


சில இராணுவ அதிகாரிகள் அரச பதவிகளை வகிப்பதனால் நாடு இராணுவ மயமானதாக அர்த்தமில்லையென்கிறார் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன.


நடைமுறை ஆட்சியில் தேசிய பாதுகாப்பு உறுதியாக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த அரசாங்கமே ஈஸ்டர் விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை சரியாக முன்னெடுக்கவில்லையெனவும் தெரிவிக்கிறார்.


இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து வினவப்பட்ட போதே இராணுவ மயப்படுத்தலை அவர் மறுத்திருந்தமையும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தொடர்ச்சியாக இராணுவமயப்படுத்தல் குறித்து குரல் எழுப்பி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment