போலந்து - இலங்கையிடையிலான நேரடி விமான சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் போலந்தின் தேசிய விமான சேவை கொழும்புக்கு நேரடியாக பயணிக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழ்நிலைக்கு முன்பாக 37 நாடுகளிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை இயங்கியதாகவும் தற்போது அதில் 23 மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment