அரசுக்கு வாசு 'கடும்' எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Saturday, 18 December 2021

அரசுக்கு வாசு 'கடும்' எச்சரிக்கை

 சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டை அனுமதித்தால் தான் உடனடியாக அரசை விட்டு விலகப் போவதாக தெரிவிக்கிறார் வாசுதேவ நானாயக்கார.


இலங்கைக்கு வேறு எந்த நாடுகளும் கடன் தர இல்லாத நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது.'


ஆயினும், சர்வதேச நாணய நிதியம் தலையிட ஆரம்பித்தால் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளில் மேலைத்தேய நாடுகளின் தேவைக்கேற்ப மாற்றங்கள் கொண்டு வர நேரிடும் என அரசின் இடது சாரி கொள்கையாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment