ISIS உடன் தொடர்பு; 702 பேரிடம் விசாரணை: TID - sonakar.com

Post Top Ad

Tuesday 2 November 2021

ISIS உடன் தொடர்பு; 702 பேரிடம் விசாரணை: TID

 


ஐ.எஸ் அமைப்பு மற்றும் அதன் இந்திய உப கிளை அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததன் பின்னணியில் 702 பேர் விசாரிக்கப்படுவதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளது பயங்கரவாத விசாரணை பிரிவு.


ஈஸ்டர் தாக்குதலையடுத்து நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றில் இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் கைதான நபர் ஒருவரின் கைத்தொலைபேசியில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment