ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் தாக்குதலுக்கு முன்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக நாடாளுமன்றில் ஹரின் பெர்னான்டோ வெளியிட்ட தகவலை மறுத்துள்ளார் அமைச்சர் சரத் வீரசேகர.
அத்துடன் வெடிகுண்டுகள் கொண்டு சென்ற லொறியொன்று காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்டிருந்ததாக ஹரின் வெளியிட்ட தகவலையும் அவர் மறுத்துள்ளதுடன் குறித்த லொறியில் மீன் கொண்டு செல்லப்பட்டதாகவே விசாரணை முடிவுகள் தெரிவிப்பதாக கூறுகிறார்.
சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தமது குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஹரின் நேற்றைய தினம் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment