அமைச்சரவை 'எண்ணிக்கைக்கு' எதிராக வழக்கு - sonakar.com

Post Top Ad

Saturday 20 November 2021

அமைச்சரவை 'எண்ணிக்கைக்கு' எதிராக வழக்கு

 அரசியலமைப்பில் அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து பொறியியலாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.


ஜனாதிபதி, பிரதமர், சட்டமா அதிபர் உட்பட 83 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் தற்போதைய அமைச்சரவை நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் இரு மேலதிக அமைச்சர்கள் மற்றும் நான்கு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment