கொரோனா: இனி மக்கள் தான் பொறுப்பு; கெஹலிய - sonakar.com

Post Top Ad

Friday 19 November 2021

கொரோனா: இனி மக்கள் தான் பொறுப்பு; கெஹலிய

 


கொரோனா சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து விட்டதாகவும் இனி மக்களே பொறுப்பெனவும் தெரிவிக்கின்றார் கெஹலிய ரம்புக்வெல.


உலகிலேயே 75 வீதத்துக்கு அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கிய நாடுகளுள் இலங்கை அடங்குவதாகவும் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து விட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


இந்நிலையில் மக்களும் விழிப்புடனும், தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment