சுவிஸ் பிரஜாவுரிமை; ஏங்கும் கீதா! - sonakar.com

Post Top Ad

Sunday 7 November 2021

சுவிஸ் பிரஜாவுரிமை; ஏங்கும் கீதா!

 


தனது சுவிஸ் பிரஜாவுரிமையைக் கைவிட்டது தனக்குத் தானே செய்து கொண்ட அநீதியென தனது ஏக்கத்தை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க.


நாட்டில் மாற்றம் வரும், முன்னேறும் என்ற நம்பிக்கையில் தான் எடுத்த முடிவு தவறாகிப் போய் தற்போது ஊருக்குச் சென்றால் பசளை, அத்தியவாசியப் பொருட்கள், உணவுப் பண்டங்கள், எரிபொருள் என எல்லாவற்றிலும் பஞ்சம் நிலவுவதால் மக்களின் சாபத்தையே பெற வேண்டியுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


நம்பிக்கையுடன் சுவர்களில் சித்திரம் வரைந்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு கேட்டு அலைந்த போது கண்டு கொள்ளாத பிரதமர் இப்போது அவர்களைத் தேடுவதும் வேடிக்கையானது என கீதா அங்கலாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment