ஆளுங்கட்சி முறுகல்; பி.சபை பட்ஜட் தோல்வி! - sonakar.com

Post Top Ad

Saturday 13 November 2021

ஆளுங்கட்சி முறுகல்; பி.சபை பட்ஜட் தோல்வி!

 


பெரமுன கட்டுப்பாட்டின் கீழுள்ள வாரியபொல பிரதேச சபையின் வரவு - செலவுத்திட்டத்துக்கு எதிராக ஆளுங்கட்சியைச் சேர்ந்த மூவர் எதிர்த்து வாக்களித்ததன் பின்னணியில் பட்ஜட் தோல்வியடைந்துள்ளது.


2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு 18 பேர் ஆதரவளித்திருந்த நிலையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆளுங்கட்சியினர் மூவர் வாக்களித்ததனால் 21 வாக்குகள் வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராகப் பதிவாகியுள்ளது.


குறித்த பிரதேச சபையில் 23 பொது ஜன பெரமுன உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment