சேர் இன்னும் 'பெயிலாக' வில்லை: ஜோன்ஸ்டன்! - sonakar.com

Post Top Ad

Sunday 7 November 2021

சேர் இன்னும் 'பெயிலாக' வில்லை: ஜோன்ஸ்டன்!

 


ஜனாதிபதி எதிர்பார்த்த வகையிலான நிர்வாகத் திறமையற்றவர் என்பதைக் குறிப்பதற்காக சமூக வலைத்தளங்களில் 'சேர் பெயில்' என உருவாக்கப்பட்ட சொற்றொடர் அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.


தொடர்ச்சியாக அரசாங்கம் வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாக எதிர்த்தரப்புகள் விமர்சித்து வரும் நிலையில் சேர் இன்னும் பெயிலாகவில்லையென விளக்கமளித்துள்ளார் தீவிர ராஜபக்ச விசுவாசியான ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.


சேர் பெயில் என்பது பொய்ப் பிரச்சாரம் எனவும் ஜனாதிபதி இரு வருடங்களுக்குள்ளேயே தான் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை செவ்வனே நிறைவேற்றி விட்டு மேலும் நாட்டுக்கு சேவை செய்து வருவதாகவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் வீரகெட்டியவில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து சொற்பொழிவாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment