முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான சீருடை மற்றும் புத்தகக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு
நேற்று (2021/11/06)ஆம் திகதி காலை 9.00மணியளவில் புத்தளம் முஹிதீன் ஜும்மா பள்ளிவாசல் கேட்போர் கூடத்தில இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.அலாஅஹமட், ,கெளரவ அதிதியாக ,ஏ.எஸ்.எம்.ஜாவிட், ( சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர்) ,சிறப்பதிதியாக அஷ்ஷேஹ் ,ஏ.எம்.எம். இப்ஹாம் (மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்)எம்.எச்.எம். சலீம்மரைக்கார் (உப தலைவர்,) பாரூக் பதீன் (பொதுச் செயலாளர்), அஷ்ஷேஹ் கே.எம்.அன்வர்சதாத் (பொருலாளர்),அஷ்ஷேஹ் எஸ்.எப்.எம.இஸ்திஹார்(உப செயலாளர்,) அஷ்ஷேஹ்ஏ.ஏ.எம்.பஸ்மி (இணைப்பாளர்) சம்மேளன உறுப்பினர்கள், மற்றும் பாடசாலை அதிபர்களும் சுகாதார வழிமுறைகளைப் பேணி கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய அலா அஹமட் சிறந்த திட்ட வரைபின்கீழ் அறநெறிப் பாடசாலைகளையும், மத்ரஸா க்களையும் கொண்டு வர எண்ணியுள்ளோம் அதன் மூலம் சிறந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும் என எண்ணுகிறோம் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டதோடு, இவை பற்றி அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் நிருவாகிகளுடனும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றது எனவும்
இன்னும் பல கட்டங்களைக் கடக்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அத்தோடு புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளன நிருவாக சபைக் கூட்டமும் நடைபெற்றது. பின்னர் ஏனைய அதிதிகளின் உரையுடன் சீருடை மற்றும் புத்தகக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன.
- கரீம் ஏ. மிஸ்காத்
No comments:
Post a Comment