மீண்டுமொரு கொரோனா அலை; அமைச்சர் எச்சரிக்கை! - sonakar.com

Post Top Ad

Sunday 7 November 2021

மீண்டுமொரு கொரோனா அலை; அமைச்சர் எச்சரிக்கை!

 


இலங்கையில் நான்காவது கொரோனா அலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன.


அநுராதபுர மாவட்டத்தில் கொரோனா தொற்று வெகுவாக அதிகரித்து வருவதாகவும் தினசரி தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் விளக்கமளித்துள்ள அவர், நான்காவது அலைக்கு நாடு தயாராக வேண்டும் என எச்சரித்துள்ளார்.


பொது மக்கள் இது குறித்து கவனமெடுக்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment