யாருக்காக 'ஒரே நாடு - ஒரே சட்டம்'? எரான் கேள்வி! - sonakar.com

Post Top Ad

Thursday, 28 October 2021

யாருக்காக 'ஒரே நாடு - ஒரே சட்டம்'? எரான் கேள்வி!

 


நாட்டில் அமுலில் இருக்கும் சட்டங்கள், அதிகாரம் - அரசியல் ஆளுமையுள்ளவர்களுக்கு ஒரு வகையிலும் சாதாரண மக்களுக்கு இன்னொரு வகையிலும் பயன்படுத்தப்படும் நிலையில் யாருக்காக ஒரே சட்டம் என்ற நாடகம் தேவையென கேள்வியெழுப்பியுள்ளார் நாடாளும்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன.


தேங்காய் களவெடுத்தவனுக்கு பாயும் அதே வகையான சட்டம் அரசியல்வாதிக்கு எதிராக செயற்படுகிறதா? என வினவும் அவர், நாட்டில் இருக்கும் சட்டங்களை முறையாக செயற்படுத்துதலே அவசியமன்றி புதிய சட்டங்கள் இல்லையெனவும் தெரிவிக்கிறார்.


நாடாளுமன்றுக்குள் நுழைவது சாத்தியமற்று போயுள்ள ஞானசாரவுக்கு 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி வழங்கியுள்ள நிலையில் இவ்விவகாரம் பேசு பொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment