ஒற்றுமையென்றால் என்னவென்றே தெரியாத ஒருவரின் தலைமையில் அரசாங்கம் திடீரென ஒரே நாடு ஒரே சட்டம் எனும் கோசத்தைக் கொண்டு வந்திருப்பது கேலிக் கூத்தென விசனம் வெளியிட்டுள்ளார் சமகி ஜனபல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ.
சக இனக்குழுமங்களை ஏற்றுக் கொள்ளாத, ஒற்றுமையென்றால் என்னவென்றே தெரியாத ஞானசாரவின் தலைமையில் இந்த நாடகம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் அவர், இது சந்தர்ப்பவாத அரசியலின் வெளிப்பாடு என தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் கூட சொந்தப் பெயரில் இயங்க அனுமதியில்லாத ஞானசார இவ்வாறு ஒரு செயலணியின் தலைவராக இருப்பது விசித்திரமானதும் முட்டாள் தனமானதும் எனவும் ஹரின் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment