இந்திய கடனுக்கு 'தேர்தல்' நிபந்தனையில்லை: அரசு - sonakar.com

Post Top Ad

Tuesday 19 October 2021

இந்திய கடனுக்கு 'தேர்தல்' நிபந்தனையில்லை: அரசு

 


இவ்வருடத்துக்குள் மாகாண சபை தேர்தலை நடாத்தும் நிபந்தனையிலேயே இலங்கைக்கு 500 மில்லியன் 'பொற்றோலிய' கடனை இந்தியா வழங்கவுள்ளதாக பரவி வரும் தகவலை அரசாங்கம் மறுத்துள்ளது.


இலங்கையில் மாகாண சபை முறைமைகைள் தொடர வேண்டும் என்பதில் இந்தியா கூடுதல் அக்கறையுடன் இருக்கும் நிலையில், இவ்வருட இறுதிக்குள் தேர்தலை நடாத்துவதற்கு பெரும் தொகை பணம் செலவாகும் என சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.


எனினும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குத் தேவைப்படும் 500 மில்லியன் டொலரை பெறுவதற்கு அரசு கடும் முயற்சி செய்து வருகின்றமையும், இதற்காகவே கடந்த வாரம் பழைய கடன்களை அரசாங்கம் அடைத்துள்ளமையும் அதற்கமைவாக ஒரே நாளில் 19 பில்லியனுக்கு அதிகமான பணம் அச்சிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment