நடேசனுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 7 October 2021

நடேசனுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு

 பன்டோரா பேப்பர்சில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர் தொடர்பில் விசாரணை நடாத்தும்படி ஜனாதிபதி மேற்கொண்ட உத்தரவின் பேரில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசேட விசாரணைக் குழுவொன்றை அமைத்துள்ளது.


இந்நிலையில், குறித்த குழுவினர் ராஜபக்ச குடும்ப உறுப்பினரான திருக்குமார் நடேசனுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.


உலகளாவிய ரீதியில் பினாமி பெயர்களில் பாரிய அளவில் சொத்துக் குவித்தவர்களின் பெயர்கள் பன்டோரா பேப்பர்ஸ் ஊடாக வெளியாகியிருந்த நிலையில்  ராஜபக்ச குடும்ப உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான நிருபமா ராஜபக்ச மற்றும் கணவர் திருக்குமார் நடேசனின் பெயர்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment