நல்லாட்சி அரசை தோற்கடித்ததன் விளைவை மக்கள் இப்போது உணர்ந்துள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சர் ருவன் விஜேவர்தன.
ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், கடந்த ஆட்சியோடு ஒப்பிடுகையில் இப்போது மக்கள் எல்லா வகையிலும் இழப்புகளையே சந்தித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்சமயம் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேசியப் பட்டியல் ஊடாக ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள போதிலும் தமது கட்சி மீளவும் புத்துயிர் பெறும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment