ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டின் பின்னணியில் கொழும்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இரு ஈரானியர்கள் உயிரழந்துள்ளனர்.
ஈரானிய தூதரகத்தினால் வழங்கப்பட்டிருந்த சனிடைசரை அருந்தியதன் விளைவாகவே இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் எண்மர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பு ஈரானிய தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment