பன்டோரா பேப்பர்ஸ் ஊடாக பாரிய சொத்துக் குவிப்பு விவகாரத்தில் சிக்கியிருக்கும் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நிருபமா ராஜபக்சவின் கணவர் தாம் நிரபராதிகள் என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மல்வானை வீட்டு விவகாரத்திலும் தாம் நிரபராதியென அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் எழுதியிருந்த கடிதமும் பன்டோரா பேப்பர்ஸ் ஊடாக வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தற்போதும் தாமோ தமது மனைவியோ எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லையென அவர் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் பினாமி பெயர்களில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் சொத்துக் குவித்தோர் விபரங்கள் பன்டோரா பேப்பர்ஸ் ஊடாக வெளியாகியுள்ளமையும் அதில் நிருபமா ராஜபக்சவின் பெயரும் உள்ளடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment