சி.ஐ.டியின் செயற்பாட்டில் ஜோன்ஸ்டன் அதிருப்தி - sonakar.com

Post Top Ad

Saturday 2 October 2021

சி.ஐ.டியின் செயற்பாட்டில் ஜோன்ஸ்டன் அதிருப்தி

 சமூகத்தில் நடக்கும் குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதை விடுத்து அது பற்றிய தகவல் தந்தவர்களுக்கு சிக்கல்களை உருவாக்கும் நடைமுறை ஏற்புடையதல்ல என்கிறார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.


அண்மையில் பூண்டு ஊழல் பற்றி தகவல் வெளியிட்ட ஊடகவியாலர்களை, பிரதமரின் தலையீட்டையும் மீறி சி.ஐ.டியினர் விசாரித்தது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடு என அவர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.


அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் உத்தரவாதம் வழங்கிய பின்னரும் குறித்த ஊடகவியலாளர்கள் சி.ஐ.டியினரால் விசாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment