பூண்டு ஊழல் விவகாரத்தில் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியாகி வரும் தகவல்கள் தொடர்பில் அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்து நீதியை நிலை நாட்டும் வரை தான் அரசு சார்பில் எந்த விடயத்திலும் பேசப் போவதில்லையென்கிறார் பந்துல குணவர்தன.
பதவி விலகிய முன்னாள் நுகர்வோர் அதிகார சபை பிரதானி, துஷான் குணவர்தன வெளியிட்ட தகவல்களின் பின்னணியில் பூண்டு ஊழலில் பந்துலவும் தொடர்பு பட்டுள்ளதாக பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்றன.
இவ்விடயத்தைத் தெளிவுபடுத்தி தனக்கு நீதியை நிலை நாட்ட ஆட்சியாளர்கள் தவறினால் தான் அரசியலை விட்டு ஒதுங்கப் போவதாகவும் அவர் தெரிவிப்பதோடு முன்னாள் நுகர்வோர் அதிகார சபை பிரதானியிடம் ஒரு பில்லியன் ரூபா மான நஷ்ட இழப்பும் கோரி கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment