ரிசாதுக்கு உதவிய ஜெயிலருக்கு இட மாற்றம் - sonakar.com

Post Top Ad

Friday 3 September 2021

ரிசாதுக்கு உதவிய ஜெயிலருக்கு இட மாற்றம்

 


சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கு கைத்தொலைபேசியொன்றை வழங்கியதன் பின்னணியில் சிறைச்சாலை அதிகாரியொருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிசாத் பதியுதீன், சிறையில் கைத்தொலைபேசியொன்றில் உரையாடிக் கொண்டிருந்ததாகவும் இதன் போது, அதிகாரிகள் நுழைவதைக் கண்டு அதனை வீசியெறிந்ததாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையிலேயே, குறித்த நபர் வவுனியா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment