தற்போது அமுலில் உள்ளதாகக் கூறப்படும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான பயண கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கிறார் இராணுவ தளபதி.
அத்துடன் ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னரான சுகாதார கட்டுப்பாடுகள், விதிமுறைகள் பற்றி பின்னர் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான உயிர்ப்பலியைத் தவிர்க்குமுகமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டிருந்த போதிலும் பெரும்பாலான இடங்களில் வழமை போன்றே சன மற்றும் வாகன நெரிசல் காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பெருமளவு சுட்டிக்காட்டப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment