எல்லே தேரருக்கும் அரசின் மீது 'அதிருப்தி' - sonakar.com

Post Top Ad

Friday 17 September 2021

எல்லே தேரருக்கும் அரசின் மீது 'அதிருப்தி'

 


நடைடுறை அரசை ஆட்சிபீடத்தில் அமர்த்துவதற்காக கடுமையாக உழைத்த எல்லே குணவங்ச தேரரும் அரசின் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.


ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்படும் பாவங்களில் பங்கேற்க முடியாமல் புத்தஜீவிகள் பதவிகளைத் துறந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஐந்து வருடங்கள் ஆட்சிக்கான அனுமதி கிடைத்தது நாட்டைக் கூறு போட்டு விற்பனை செய்வதற்காக இல்லையெனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளமையும் தொடர்ச்சியாக பல இராஜினாமாக்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment