நியுசிலாந்து தாக்குதல்தாரி தொடர்பில் இலங்கையிலும் விசாரணை - sonakar.com

Post Top Ad

Sunday 5 September 2021

நியுசிலாந்து தாக்குதல்தாரி தொடர்பில் இலங்கையிலும் விசாரணை

 


நியுசிலாந்தில் அப்பாவி மக்களை கத்தியால் குத்திக் காயப்படுத்திய பயங்கரவாதி ஆதில் முஹமத் சம்சுதீன் தொடர்பில் இலங்கையிலும் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


32 வயதான குறித்த நபர் பத்து வருடங்களுக்கு முன்னர் நியுசிலாந்துக்கு மாணவனாக பயணித்து, அங்கு அரசியல் தஞ்சம் கோரியுள்ள அதேவேளை இலங்கையிலும் மட்டக்களப்பு, மொரட்டுவ மற்றும் கொலன்னாவ பகுதிகளில் வாழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


காத்தான்குடியைச் சேர்ந்த குறித்த நபர், ஐ.எஸ் ஆதரவாளனாக மாறியிருந்த நிலையில் ஏலவே அங்கு கைது செய்யப்பட்டிருந்ததுடன், நியுசிலாந்து பாதுகாப்பு பிரிவினரின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்திருந்தார். இதேவேளை, தற்போது குறித்த நபரின் பெற்றோர், உறவினர்கள், நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் என பரந்த அளவில் இலங்கையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment