பாப்பரசரை 'ஏமாற்ற' முயற்சி: கார்டினல் சாடல் - sonakar.com

Post Top Ad

Wednesday 8 September 2021

பாப்பரசரை 'ஏமாற்ற' முயற்சி: கார்டினல் சாடல்

 


இத்தாலி செல்லும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அங்கு பாப்பரசருக்கு ஈஸ்டர் விவகாரம் தொடர்பில் தவறான தகவல்களை வழங்கி உண்மை நிலையை மறைக்க முயற்சிக்கக் கூடும் என விசனம் வெளியிட்டுள்ளார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.


வத்திக்கான் சென்று இது தொடர்பில் பேசுவதற்கு இலங்கை அரச பிரதிநிதிகள் குழு முயற்சிப்பதை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.


இதனையடுத்து, வத்திக்கான் செல்வதற்கான எந்த ஆயத்தமும் இல்லையென பிரதமர் அலுவலகம் மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment