ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் உண்மைகளை அரசாங்கம் மறைத்து வருவதாகவும் அதனை வெளியிட வேண்டும் எனவும் கோரி இத்தாலியில் வாழும் இலங்கையர் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலி சென்றுள்ள வேளையில் இவ்வார்ப்பட்டம் இடம்பெற்ற நிலையில், இதற்கு எதிராகவும் பிறிதொரு இலங்கையர் குழு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் நாட்டின் பிரச்சினையை நாட்டிலேயே தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அதனை வேறு நாட்டு மண்ணில் வைத்து பேச வேண்டிய அவசியமில்லையெனவும் அக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், ஈஸ்டர் தாக்குதல் நடந்த பின்னர், இன்னும் ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரவில்லையா? என முக்கிய அரசியல்வாதியொருவர் சந்தேக நபர் ஒருவரிடம் பேசிய தொலைபேசி உரையாடல், அதே போன்று தெஹிவளை தற்கொலைதாரியுடன் தொடர்பிலிருந்த இராணுவத்தினர் போன்ற பல விடயங்களின் உண்மைகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக் காரர்கள் இதன் போது கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment