250 கோடி ரூபா கடன் தேடும் எரிபொருள் அமைச்சர் - sonakar.com

Post Top Ad

Saturday 11 September 2021

250 கோடி ரூபா கடன் தேடும் எரிபொருள் அமைச்சர்

 


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முகங்கொடுத்து வரும் நெருக்கடியைத் தீர்க்க ஈரான், அமீரகம் உட்பட பல நாடுகளில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ள எரிபொருள் அமைச்சர், தற்போது அமெரிக்காவில் தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்றினூடாக அதனைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இரண்டு வருட சலுகையுடன் 12 வருடங்களுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் இக்கடன் தொகையைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.


வருடாந்தம் 3 வீத வட்டியில் இக்கடனைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பிலவின் அமைச்சு சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment