உள்நாட்டு சமையல் எரிவாயு வர்த்தகத்தை தனது ஆளுமைக்குள் கொண்டு வருவதற்கு மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களுள் ஒருவரான யோசித்த ராஜபக்ச முயற்சி செய்வதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலில் எவ்வித உண்மையுமில்லையென அவர் மறுதலித்துள்ளார்.
தன்னிடம் தங்கக் குதிரையிருப்பதாக முன்னர் பரப்பப்பட்ட போலிப் பிரச்சாரம் போன்றே இதுவும் எனவும் தான் அவ்வாறு எந்த நிறுவனத்தோடும் தொடர்பு படவோ எரிவாயு வர்த்தகத்தில் இதுவரை தலையிடவோ இல்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
லங்கா கேஸ் நிறுவனம் பெரும் இழுபறிக்குள்ளாகியுள்ள நிலையில் பல்வேறு பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment