நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், விமான நிலையத்தை மூடுவது தொடர்பிலும் பேச்சு நிலவி வருகிறது.
எனினும், அவ்வாறு எந்த முடிவும் இல்லையெனவும் வழமை போன்று விமான நிலையம் இயங்கும் எனவும் தெரிவிக்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
இலங்கை இன்னும் பல நாடுகளில் 'சிவப்பு' பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை இந்நாடுகளில், இலங்கையிலிருந்து பயணிப்போர் பாரிய பொருட் செலவில் 10 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தமும் தொடர்கிறது. ஆயினும், கடந்த வாரம் 300 பேர் வரை நாட்டுக்கு வந்துள்ளதாக பிரசன்ன சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment