கொரோனா சூழ்நிலை கட்டுப்பாட்டை மீறிப் போவதாக விமர்சித்து வந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை நேரடியாக சந்தித்து அனைத்து கட்சித் தலைவர்கள் மாநாட்டை நடாத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
இச்சந்திப்பு சாதகமாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணிலின் கோரிக்கைக்கு இணங்கியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா சூழ்நிலையைக் கையாள்வதற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பரிந்துரைகள் கையளிக்கப்பட்டிருப்பதாகவும், இவ்வாறு ஒரு சந்திப்பை ஏற்படுத்தினால் ஏனைய கட்சிகளும் தமது ஆலோசனைகளை முன் வைக்கலாம் எனவும் ஐ.தே.க விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment