கிடைத்ததைக் கொண்டு திருப்தி: பவித்ரா ஆதங்கம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 17 August 2021

கிடைத்ததைக் கொண்டு திருப்தி: பவித்ரா ஆதங்கம்!

 


சுகாதார அமைச்சுப் பதவி தன்னிடம் பறி போகும் என்று எதிர்பார்க்காத நேரத்தில் அது நடந்திருப்பதாக தெரிவிக்கிறார் பவித்ரா வன்னியாராச்சி.


அதே போல எதிர்பார்க்காத தருணத்தில் போக்குவரத்து அமைச்சு கிடைத்திருப்பதாகவும், ஜனாதிபதி செயலகத்துக்குச் செல்லும் வரை என்ன நடக்கப் போகிறது என்று எதுவும் தனக்குத் தெரியாது எனவும் அவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.


எனினும், வாழ்க்கையில் கிடைப்பதைக் கொண்டு திருப்தியடைந்தால் 'சந்தோசமாக' இருக்கலாம் எனும் அடிப்படையில் தான் புதிய அமைச்சை ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment