இலங்கை 'பணக்கார' நாடு இல்லை: பிரதமர் - sonakar.com

Post Top Ad

Sunday, 29 August 2021

இலங்கை 'பணக்கார' நாடு இல்லை: பிரதமர்


கொரோனா தொற்றின் தீவிரத்தைத் தடுக்க சில செல்வந்த நாடுகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகளை இலங்கையில் அமுல்படுத்த முடியாது என தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


இலங்கையின் பொருளாதார சூழ்நிலையைக் கருத்திற்கொண்டே நடவடிக்கைகள் திட்டமிடப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் ஊடாக கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment