முன்னாள் அட்மிரலுக்கு எதிரான வழக்கும் வாபஸ் - sonakar.com

Post Top Ad

Wednesday 4 August 2021

முன்னாள் அட்மிரலுக்கு எதிரான வழக்கும் வாபஸ்

 



11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ஓய்வு பெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கைக் கைவிட்டுள்ளது சட்டமா அதிபர் அலுவலகம்.


இவ்வருட ஆரம்பத்தில் குறித்த வழக்கு 'அரசியல் பழிவாங்கல்' எனவும் விசாரணைகளை நிறுத்துமாறும் ஜனாதிபதி ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு அறிவுரை வழங்கியிருந்தது.


இந்நிலையில், வழக்கைக் கைவிடுவதாக சட்டமா அதிபர் அலுவலகம் உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. இப்பின்னணியில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்கி, அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment