உடனடியாக ஊரடங்கை அமுல் படுத்த கோரிக்கை - sonakar.com

Post Top Ad

Wednesday 11 August 2021

உடனடியாக ஊரடங்கை அமுல் படுத்த கோரிக்கை

 


கொரோனா பெருந்தொற்று மீண்டும் நாட்டில் தீவிரமடைந்துள்ள நிலையில், தேசிய ரீதியிலான ஊரடங்கை உடனடியாக அமுலுக்குக் கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்துள்ளது வைத்திய நிபுணர்கள் சங்கம்.


கொரோனா பரவல் தீவிரத்தைத் தடுக்க அதுவே சிறந்த வழியென பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் நாட்டை நீண்ட நாட்களுக்கு மூடி வைக்க முடியாது எனவும் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகி வருவதகவும் அரசாங்கம் விளக்கமளித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.


எனினும், தற்போதைய நிலைமை கட்டுப்படுத்தப்படாவிடின் நாடு பாரிய பாதிப்புகளுக்கு முகங்கொடுக்கும் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment