கோட்டாபேவை நம்பி ஏமாந்து விட்டோம்: விஜேதாச! - sonakar.com

Post Top Ad

Saturday 14 August 2021

கோட்டாபேவை நம்பி ஏமாந்து விட்டோம்: விஜேதாச!

 


நாட்டின் 'சிஸ்டத்தை' மாற்றப் போகிறார், அபிவிருத்தியடைந்த நாடான அமெரிக்க பின்புலத்திலிருந்து வந்திருக்கிறார் என்ற முழு நம்பிக்கையோடு ஜனாதிபதியாக்கினால், ஆகக்குறைந்தது அந்த நாட்டில் போல மிஸ்டர் கோட்டாபே என்று அழைக்கும் வழக்கத்தைக் கூட உருவாக்க முடியாத கையறு நிலையில் ஜனாதிபதி இருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் விஜேதாச ராஜபக்ச. இன்னும் 'அதி உத்தம' ஜனாதிபதியென்று சொல்லப்படுவதையே கோட்டாபேவும் விரும்பிக் கொண்டிருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.


சமூக வலைத்தளம் ஊடாக ஜனாதிபதிக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர், 30 வருட யுத்தத்தை வென்றதாகக் கூறிக்கொள்ளுவதைத் தவிர வேறு எதையும் சாதிக்க முடியவில்லையெனவும் தற்போது நாடு 16 ட்ரில்லியன் ரூபா கடனிலிருப்பதோடு ராஜபக்சக்கள் நாட்டைத் துண்டாடி விற்பனை செய்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.


நாட்டுக்கு ஹிட்லர் போன்ற சர்வாதிகாரி அவசியப்படுவது நாட்டைக் கட்டியெழுப்பவேயன்றி துண்டாக்கி விற்பதற்காகவல்ல என தற்போது மஹிந்த ராஜபக்சவே ஆங்காங்கு கருத்து வெளியிடுகிறார் எனவும் தெரிவித்துள்ள விஜேதாச, தன்னுடைய நீண்ட கடிதத்தைப் பார்த்து கோபப்படாமல் தனிமையில் இருந்து வாசிக்கும் படி அறிவுரையும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment