கொரோனா முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரை 700 பில்லியன் ரூபா செலவு செய்துள்ளதாக தெரிவிக்கிறார் இராஜாங்க நிதியமைச்சர் அஜித் நிவாத் கபரால்.
இது 2020ம் ஆண்டுக்கான அரசின் மொத்த வருமானத்தின் அரைப் பகுதியெனவும் அவர் விளக்கமளித்துள்ளார். 2020ல் அரசின் மொத்த வருமானம் 1380 பில்லியன் ரூபா என்பது அவர் வெளியிட்டுள்ள தகவல்.
தடுப்பூசி கொள்வனவு, தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண உதவி, கொரோனா சிகிச்சை மையங்கள் உருவாக்கல், உபகரண கொள்வனவு போன்ற அனைத்தும் இதில் உள்ளடக்கம் என அவர் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment