5 நாளே விசாரணை; 97 நாட்கள் அடைத்து வைப்பு: ரிசாத் - sonakar.com

Post Top Ad

Wednesday 4 August 2021

5 நாளே விசாரணை; 97 நாட்கள் அடைத்து வைப்பு: ரிசாத்

 


தன்னைக் கைது செய்து 102 தினங்களாகியுள்ள நிலையில், ஐந்து நாட்களே தான் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் ஏனைய 97 நாட்களும் மூடிய அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் ரிசாத் பதியுதீன்.


இவ்வாறு காரணமின்றி தடுத்து வைத்திருப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் என சமகி ஜன பல வேகயவின் லக்ஷ்மன் கிரியல்லவும் இன்று சபை அமர்வில் வைத்து குரல் எழுப்பியிருந்தார்.


ஜனாதிபதியும், பிரதமரும் இந்தச் சபையில் இருக்கின்றார்கள். என்னை கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்தார்கள். வெறும் 5 நாட்கள் மாத்திரமே என்னை விசாரணை செய்தார்கள். 102 நாட்கள் என்னை தடுத்துவைத்துள்ளார்கள். 97 நாட்கள் வரையில் அறையில் அடைத்து வைத்துள்ளார்கள். 24 மணி நேரமும் அந்த அறை மூடப்பட்டு, மலசலகூடத்துக்கு மட்டும் என்னை வெளியில் செல்ல அனுமதிக்கிறார்கள். இன்றுவரை, எந்தவிதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை. நான் பொய் கூறவில்லை. வேண்டுமென்றால் வந்து பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment