18-30 வயதினருக்கு செப்டம்பரில் தடுப்பூசி - sonakar.com

Post Top Ad

Sunday 22 August 2021

18-30 வயதினருக்கு செப்டம்பரில் தடுப்பூசி

 


18 முதல் 30 வயதுக்குட்பட்டோருக்கு செப்டம்பர் நடுப்பகுதியில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெறும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


30 வயதுக்குட்பட்ட சுமார் 11.5 மில்லியன் பேர் நாட்டில் இருப்பதாகவும் 99 வீதமானோருக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாகவும தெரிவிக்கின்ற அவர், 18 - 30 வயதினர் 3.2 மில்லியன் இருப்பதாகவும் செப்டம்பர் இரண்டாவது வாரம் முதல் இவ்வயதினர்க்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும் எனவும் விளக்கமளித்துள்ளார்.


அரச தகவல் அடிப்படையில் இதுவரை 5.6 மில்லியன் பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment