அமைச்சர் சரத் வீரசேகரவின் பொறுப்பின் கீழிருந்த சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பல்துறை அபிவிருத்தி விசேட செயலணிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
அண்மைக்காலமாக சிலரது அமைச்சுப் பொறுப்புகள் இவ்வாறு மாற்றப்படுகின்ற அதேவேளை, விமல் வீரவன்சவிடமிருந்து இலாபமீட்டிக் கொண்டிருந்த நிறுவனம் அபகரிக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்திருந்தன.
இந்நிலையில், பல முனைகளில் தனது குரலை பதிவு செய்யும் வகையில் கருத்துக்கள் வெளியிட்டு வரும் சரத் வீரசேகரவிடமிருந்து இரு நிறுவனங்கள் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment